சிறீலங்கா குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் குறித்து தொடர்ந்தும் கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஆராய்வதற்கும் சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறீலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வரும் நிலையில் இவ்வாறான பொறிமுறை அவசியம் என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.