சிறீலங்காவில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மேலும் 31 பேரின் உடலங்கள் கடந்த இரு நாட்களில் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் ஓட்டமாவடியில் தொடர்ச்சியாக அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்-30) 19 உடல்களும், நேற்று (ஜூனலை-01) 12 பேரின் உடலங்களும் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த இரு நாட்களில் இவ்வாறு 31 கொவிட்-19 உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.