சிறீலங்காவில் நேற்று மட்டும் 3306 பேருக்கு கொரோனா!

You are currently viewing சிறீலங்காவில் நேற்று மட்டும் 3306 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று மட்டும் 3306 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 504 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 527ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 30ஆயிரத்து 267 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply