இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 04 பேர் மரணமடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது ஆண், பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், வத்தளையை சேர்ந்த 18 வயது யுவதி, மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது பெண் உள்ளிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன
இதேவேளை
கடந்த 24 மணி நேரத்தில் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குருநாகலில் 251 பேருக்கும் கம்பஹாவில் 236 பேருக்கும் கொழும்பில் 194 பேருக்கும்
களுத்துறையில் 48 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 38 பேருக்கும் காலியில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 28 பேரும் மாத்தறையில் 26 பேரும் அநுராதபுரத்தில் 23 பேரும் மாத்தளையில் 21 பேரும் வவுனியாவில் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டியில் 11 பேருக்கும் மொனராகலையில் 10 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 09 பேருக்கும் திருகோணமலையில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.