இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று பரவலானது தீவிரமான நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வீடுகளிலேயே கொவிட்-19 மரணங்கள் நிகழும் துயரமும் தொடர்கதையாகி வருகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் தகவலை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறித்த மரணங்கள தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 40 கொவிட்-19 மரணங்களில் 9 மரணங்கள் வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன்-02, 03, 04 ஆகிய நாட்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் நிகழ்ந்த 129 கொவிட்-19 மரணங்களில் 33 பேர் இவ்வாறு வீடுகளிலேயே உயிரிழந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 25 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 6 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 40 மரணங்களும் மே-21 ஆம் திகதி தொடக்கம் ஜூன்-05 ஆம் திகதி வரையான நாட்களில் நிகழ்ந்துள்ளது.
மே – 21 – ஒருவர்
மே – 25 – ஒருவர்
மே – 27 – 02 பேர்
மே – 28 – 02 பேர்
மே – 30 – 08 பேர்
மே – 31 – 04 பேர்
ஜூன் – 01 – 07 பேர்
ஜூன் – 02 – 04 பேர்
ஜூன் – 03 – 07 பேர்
ஜூன் – 03 – 03 பேர்
ஜூன் – 03 – ஒருவர்
இவ்வாறு பெண்கள் 17 பேர் மற்றம் ஆண்கள் 23 பேர் என 40 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 1,656 இல் இருந்து 1,696 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 357ஆக அதிகரித்துள்ளது.