சிறீலங்காவில் 2,078 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் 2,078 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று!

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,917 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 150 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 43 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள