சிறீலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற வாய்ப்புண்டு!

You are currently viewing சிறீலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற வாய்ப்புண்டு!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீப மகநாமகேவ தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களிற்கு எதிராக இடைக்கால யோசனையொன்றை முன்வைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறி;க்கையை எதிர்ப்பதை தானும் விரும்புவதாக முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை முன்வைத்தால் அதனை எதிர்கொள்வதற்கான திட்டம் அவசியம் என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை முன்னேற்றுவதற்கான திட்டமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச அமைப்புகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இதனை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள