சிறுவர்களை வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக உலகின் முன்னணி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!

You are currently viewing சிறுவர்களை வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக உலகின் முன்னணி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!

உலகின் முன்னணி நிறுவனங்களான, “Apple, Google, Dell, Microsoft” மற்றும் “Tesla” நிறுவனங்கள், தமது தயாரிப்புக்களில் பாவிக்கப்படும் “Gobalt” எனப்படும் மூலகத்தை பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கும் வேலையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன!

மேற்படி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்னியல் பாவனைப்பொருட்களுக்கு தேவையான மின்கலன்களை தயாரிப்பதற்கு தேவையான “Gobalt” மூலகத்தை, வறுமைப்பட்ட ஆபிரிக்க நாடுகளிலிருந்து மிக மலிவாக பெற்றுக்கொள்ளும் இந்த நிறுவனங்கள், “Kongo” நாட்டிலுள்ள சிறுவர்களை, அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, தமது அகழ்வு வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மூலகத்தை அகழ்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களுக்கு, உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், அகழ்வு வேலைகளின்போது சுரங்கங்கள் சரிந்து விழுவதால் அதில் அகப்படும் சிறுவர்கள் மரணமாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை வேலைகளில் அமர்த்துவது, தடை செய்யப்பட்டுள்ளபோதும், மேற்படி உலகப்புகழ் பெற்ற நிறுவனங்கள், இவ்வாறு உலக சட்டவிதிகளை புறந்தள்ளிவிட்டு, சிறுவர்களை ஆபத்தான வேலைகளில் அமர்த்தி வந்திருப்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதோடு, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான வைத்திய செலவுகளையும் இந்த நிறுவனங்களே வழங்க வேண்டுமெனவும், “Kongo” நாட்டு அதிகாரிகள் இந்த நிறுவனங்கள்மீது வழக்கு தொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக உலகின் முன்னணி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு! 1
பகிர்ந்துகொள்ள