“கொரோனா” தாக்கத்தால் இத்தாலியில் இதுவரை 3405 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
சீனாவில் பதிவுசெய்யப்பட்ட “கொரோனா” மரணங்களை விடவும் இது அதிகமானதென தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் இதுவரை 3240 மரணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
“ரொய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, இத்தாலியில் 41034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 15757 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2498 பேர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.