மாட்ரிட் : கொரோனா வைரஸால் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒருவர் பலி!

  • Post author:
You are currently viewing மாட்ரிட் : கொரோனா வைரஸால்  ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒருவர் பலி!

ஸ்பெயினில், கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மக்கள் வீடுகளுக்குள் தங்குவதை உறுதி செய்வதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் ஸ்பெயினில் மிக வேகமாக பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸின் விளைவாக 262 பேர் இறந்துள்ளனர்.

மொத்தத்தில், நாட்டில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஐரோப்பாவில், இத்தாலியில் மட்டுமே அதிக இறப்புகள் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில், கொரோனா வைரஸின் விளைவாக 627 பேர் இறந்துள்ளனர்.

ஸ்பெயினின் தலைநகரம் மாட்ரிட்தான் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில், தலைநகரில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு மனிதர் என்ற கணக்கில் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்று El Pais பத்திரிகை கூறியுள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை இன்னும் மோசமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது! .

மேலதிக விபரம்: NRK.no

பகிர்ந்துகொள்ள