சீனாவில் மேலும் இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

  • Post author:
You are currently viewing சீனாவில் மேலும் இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

ஆபத்தான நுரையீரல் வைரஸின் விளைவாக சீன நகரங்களான ஹுவாங்காங்(Huanggang) மற்றும் ஈஜோவில்(Ezhou) உள்ள அதிகாரிகள் பொதுப் போக்குவரத்துகளை நிறுத்தியுள்ளனர். முன்னர் வுஹானும்(Wuhan) இவ்வாறே செய்துள்ளது.

புதிய நுரையீரல் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வுஹானிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஹுவாங்காங்(Huanggang) உள்ளது.
நகரத்தில் 7.5 மில்லியன் மக்கள் தொகை உள்ளது, மேலும் நள்ளிரவு முதல் அறிவிப்பு வரும் வரை புகையிரத நிலையம் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் படுவதுடன் மதுபாவனை நிலையங்கள் மற்றும் திரைப்படக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அருகிலுள்ள மூன்றாவது நகரமான ஈஜோவில்(Ezhou) உள்ள புகையிரத நிலையமும் வியாழக்கிழமை இரவு மூடப்படும். இந்த நகரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.

சுமார் 11 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹானுக்கு(Wuhan) உள்ளேயும் வெளியேயும் அனைத்து போக்குவரத்தையும் அதிகாரிகள் புதன்கிழமை நிறுத்தியுள்ளனர். இது மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகராகும்.
மேலும் கூட்டத்தைத் தவிர்க்குமாறும் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை குறைந்தது 17 பேரைக் கொன்ற நுரையீரல் வைரஸ் வுஹானில்(Wuhan) உள்ள சந்தையில் சட்டவிரோதமாக வனவிலங்கு, நீர் பாம்பு விற்பனை செய்ததன் மூலம் மக்களுக்கு தொற்றியிருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள