ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு “பாசத்தை விட வசதிக்கான திருமணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது.
உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த நிலையில், ரஷ்யாவை சீனா வெளிப்படையாகவே கண்டிக்க மறுத்தது.
இதற்கு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வலுவான நட்பினை ரஷ்யாவுடன் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருவதே முக்கிய காரணம் என்று வல்லுநர்களால் சொல்லப்பட்டது.
அந்த வகையில் உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதுவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றங்களை நிகழ்த்தியதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்-டை பிறப்பித்துள்ள சில நாட்களுக்குப் பிறகு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு ”பாசத்தை விட வசதிக்கான திருமணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்ற அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி திங்களன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனா-ரஷ்யா இடையிலான உறவு, பல தசாப்த கால அனுபவமும், முழு நம்பிக்கையும் கொண்டவை அல்ல என்றும், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் அமெரிக்க தலைமையின் அடிப்படையில் இது தாமதமாக வளர்ந்து வருகிறது மற்றும் அதை சரிபார்க்க இரண்டு நாடுகளும் முயற்சிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் அமெரிக்க தலைமைக்கு சவால் விடும் ”சர்வதேச ஆதரவின் வலுவான அடித்தளம்” தங்களுக்கு இல்லை என்பதை இரண்டு நாடுகளும் அங்கீகரிக்கின்றனர் என்று பேச்சை முடித்தார்.