சீன மருத்துவமனையில் தீ விபத்து: உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்!

You are currently viewing சீன மருத்துவமனையில் தீ விபத்து: உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்!

சீனாவின் பெய்ஜிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. சீன தலைநகர் ஃபெங்டாய் மாவட்டத்தில்(Fengtai District) உள்ள பெய்ஜிங் சாங்ஃபெங் மருத்துவமனையில்(Beijing Changfeng Hospital) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக அரசு நடத்தும் பெய்ஜிங் டெய்லி செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக மதியம் 1 மணிக்கு முன்பு சீனாவில் அவசரகால குழுவிற்கு தகவல் வழங்கப்பட்டதாக பெய்ஜிங் டெய்லி அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதில் 71 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 21 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை.

இந்த திடீர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என பெய்ஜிங் டெய்லி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சமூக ஊடக பயனர்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பிறகு, நோயாளிகள் கட்டிடத்தின் மாடியில் இருந்து குதிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply