அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட 3 இளம்பெண்கள்!

You are currently viewing அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட 3 இளம்பெண்கள்!

அமெரிக்காவில் மூன்று பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு முன்பு, நெருங்கியவர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஈக்வடாரில் கடற்கரை பயணம் மேற்கொண்ட டெனிஸ் ரெய்னா(19) யூலியானா மசியாஸ்(21) மற்றும் நயேலி டாபியா(22) ஆகிய மூன்று பெண்கள் ஏப்ரல் 4ம் திகதி காணாமல் போகினர்.

பின் அவர்கள் மூவரும் காணாமல் போன மூன்று நாட்களுக்கு பிறகு, கழுத்து அறுக்கப்பட்டு, ஆழமற்ற குழியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டு இருந்தது.

உயிரிழந்தவர்களில் டெனிஸ் ரெய்னா(Denisse Reyna) ஒரு விவசாய பொறியியல் மாணவி, யூலியானா மசியாஸ்(Yuliana Macias) ஒரு பாடகர் மற்றும் நயேலி டாபியா(Nayeli Tapia) குழந்தை ஒன்றுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் தகவலின் அடிப்படையில், 3 இளம்பெண்களும் ஏப்ரல் 5 ஆம் திகதி சித்திரவதை செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஈக்வடாரின் குயின்ண்டே (Quininde) அருகே எஸ்மரால்டாஸ் ஆற்றங்கரையில்(Esmeraldas River) நாய் ஒன்று வித்தியாசமான ஒன்றை மோப்பம் பிடித்ததை தொடர்ந்து அப்பகுதியை தோண்டிய மீனவர்கள் குழு, கழுத்து துண்டிக்கப்பட்ட மூன்று இளம் பெண்களின் உடலை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் விரைவாக தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மொபைல் போன் ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் பெண்களில் இரண்டு பெண்கள் தாங்கள் ஆபத்தில் இருப்பதாக கூறி அன்புக்குரியவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டாபியா ஏப்ரல் 4ம் திகதி இரவு 11:10 மணிக்கு அவரது சகோதரிக்கு, “ஒருவேளை ஏதேனும் நிகழ்ந்தால் என்று குறிப்பிட்டு” அவரது நேரடி இருப்பிடத்துடன் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மற்றொரு இளம் பெண் ரெய்னா காணாமல் போவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் நண்பருக்கு ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள், கட்டி வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் இருந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments