சுகாதார அமைச்சு : இவற்றிட்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

  • Post author:
You are currently viewing சுகாதார அமைச்சு : இவற்றிட்கு  முன்னுரிமை வழங்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் திறன் பற்றாக்குறை ஏற்படும்போது, எந்தவகை நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக, சுகாதார பணியாளர்களுக்கான புதிய வழிமுறைகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளது.

புதிய வழிமுறைகளில் கூறப்படுள்ளவை :-

  • திட்டமிடப்பட்ட பரிசோதனைகள் “முற்றிலும் அவசியமான நிலைக்கு” வரையறுக்கப்பட்டுள்ளன. இது மொத்த தேவை, திறன் போன்றவற்றிற்கு அமைய மதிப்பிடப்படவேண்டும்.
  • சுவாசக்கருவிகள், சுவாசக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய அறுவை சிகிச்சைகள் அல்லது நோயாளிக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் இது, அவசரமானது/ ஆபத்தானது என்ற நிலையில் வைத்து மதிப்பீடு செய்யப்படல் வேண்டும்.
  • திட்டமிடப்பட்ட ஆலோசனைகளில் கலந்துகொள்வது என்பது ஒரு மருத்துவ, தொற்று தொழில்முறை மதிப்பீடு மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்டு “முற்றிலும் அவசியமான நிலைக்கு” வரையறுக்கப்பட்டுள்ளது. இது கதிரியக்கத்திற்கும் பொருந்தும்.
  • ஒழுங்கமைக்கப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகள் தற்போதைக்கு நிறுத்தப்படும்.
  • நோயாளிகளுக்கு இப்போது முடிந்தவரை உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, உள்ளூர் மருத்துவமனைகளில் தேவைப்படும் தீவிர சுகாதார சேவையை வழங்க முடியாத நிலையில், உயர்நிலை நிபுணத்துவத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

தற்போது திறன் பற்றாக்குறை என்பது இல்லாததால், இந்த ஆலோசனை இப்பொழுது பொருந்தாது என்று சுகாதார அமைச்சின் செயல் துணை இயக்குநர் Espen Nakstad கூறியுள்ளார் .

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள