ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்காப்பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த 1ம் திகதி மாலை சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.
அதன் தொடர்ச்சியாக சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல் (Basel) பாசல் லாண்ட் ( Basel-Landschaft), சொலத்தூண் ( Solothurn ) பேர்ண் (Bern) பிறிபேர்க் ( Fribourg ) மாநிலங்கள் ஊடாக 206 கிலோமீற்றர் தூரம் பயணித்து வோ (Vaud) மாநிலத்தின் நகராகிய லவுசானில் (Lausanne) இன்றைய நாள் நிறைவடைந்துள்ளது.
நீதி கோரிய பயணம் இன்று காலை (05.03.2022 ) லவுசான் (Lausanne) நகரில் ஆரம்பித்து மாலை ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா முன்றலில் நிறைவடையும்.
சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற எம்தமிழ் உறவுகள் அனைவரும்
ஈருருளிப்பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன் திங்கட்கிழமை (06.03.2023) 14:00 மணிக்கு இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப்போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொள்ளமாறு
உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.
தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.