சுன்னாகத்தில் வன்முறைக்குழு அட்டகாசம்- வீடு சேதம் வாகனம் எரிந்து நாசம்!

You are currently viewing சுன்னாகத்தில் வன்முறைக்குழு அட்டகாசம்- வீடு சேதம் வாகனம் எரிந்து நாசம்!

சுன்னாகம் சிறீலங்கா காவற்துறையினர் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று அட்டகாசம் புரிந்துள்ளதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சுன்னாகத்தில் வன்முறைக்குழு அட்டகாசம்- வீடு சேதம் வாகனம் எரிந்து நாசம்! 1

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீவைத்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.  வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் சிறீலங்கா காவற்துறைய நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் சிறீலங்கா காவற்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply