சுமந்திரன் பகிரங்க விவாதத்துக்கு வருவாரா? சட்டவாளர் காண்டீபன்!

You are currently viewing சுமந்திரன் பகிரங்க விவாதத்துக்கு வருவாரா? சட்டவாளர் காண்டீபன்!

பாராளுமன்றத் தேர்தலுக்காக தாம் ஜனநாயகரீதியில் செயற்படுவதாகக்கூறுபவர்கள் பல உண்மைகளை மூடி மறைக்க முனைகின்றார்கள்.

அதிக ஆசனங்களை பெற்று வந்த கட்சி பல கூட்டங்களை வைத்து பொய்களை சொல்லி வருகிறது. ஒரு பொய்யை பல தடவைகள் சொன்னால் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக மீண்டும் பொய் கூறிவருகிறார் சுமந்திரன்.அது தொடர்பிலும் பகிரங்க விவாதத்துக்கு வருவாரா? என்றும் காண்டீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

த.தே.ம.முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,நீலகண்டன் ஐயா கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிகிறேன் அது கூட்டமைப்பினை பலவீனப்படுத்திவிடும் என்று கூறினார்.அதனடிப்படையில் சம்பந்தன்,மாவை,சுரேஷ் போன்றோர் கலந்து கொண்டு பேசினோம், அப்போது சுமந்திரன் இல்லை தேசியப்பட்டியலில் 2010 வந்தவர்.

அப்போதும் சம்பந்தன் இந்த கொள்கை கோட்பாடுகளை வலியுறுத்த முடியாது இப் போது ஆசனங்களை இழந்து விடாது இப்போது தேர்தலில் போட்டியிடுவோம் என்று அப்போது கூறினார்.

இப்போது சுமந்திரன் சரவதேசத்தின் இடைத்தரகராக செயற்பட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய் கூறிவருகிறார்.

காண்டீபன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள