சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கடமைக்கு சென்று திரும்பிய போது வீடுடைத்து 8 தங்கப் பவுண் நகை திருட்டுப் போயிருந்தது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை சிறீலங்கா காவல் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை நேற்று கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஏழரை தங்கப் பவுண் நகை கைப்பற்றப்பட்டுள்ளது என்று சிறீலங்கா காவல்த்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை சிறீலங்கா காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.