2ம் நாளாக (03/09/2022) தமிழின அழிப்புக்கு அனைத்துல சுயாதீன விசாரணையை வலியுத்தி ஐ.நா நோக்கி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.

You are currently viewing 2ம் நாளாக (03/09/2022) தமிழின அழிப்புக்கு அனைத்துல சுயாதீன விசாரணையை வலியுத்தி ஐ.நா நோக்கி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.

நேற்றைய தினம் நெதர்லந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயணம் 100 Km தொலைவினை இன்று கடந்து பிரேடா எனும் மாநகரத்தினை வந்தடைந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழத்தில் நடத்திக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கும்,2009 ம் ஆண்டு சிறி லங்கா பேரினவாத அரசே தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்டு நடத்திய தமிழரினப் படுகொலை,போர்குற்றம், இனவழிப்பு, சர்வதேச சட்டவிதி மீறல் போன்ற குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் உள் நாட்டு குழப்பங்களை உருவாக்கி பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க விளைகின்றது என்பதனை யாவரும் அறிவீர்கள். ஆயினும் தொடர் அறவழிப்போராட்டமூடாக நாம் வாழும் நாடுகளை நம் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைப்பதும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி விசாரணை ஆரம்பிக்க ஆவன செய்ய வேண்டும். அதற்கான முன்னெடுப்பாக எதிர் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திடம் பொறுப்புக் கொடுத்து சிறி லங்கா பேரினவாத அரசு தன் திட்டமிட்டு செய்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்கு நாம் தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொள்ள அரசியற் போராட்டங்களும் அறவழிப்போராட்டங்களும் எழுச்சிகரமாக நடத்த வேண்டும்.

எனவேதான் 25 தடவையாக தொடரும் இவ் ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமும் நீதிக்கும் விடுதலைக்கும் ஆன எம் தொடர் போராட்டத்தில் முக்கியம் பெற்று நிற்கின்றது. 05/09/2022 திங்கட் கிழமை பெல்சியத்தின் தலை நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டு. வெளி நாட்டமைச்சு மற்றும் முக்கிய மையங்களில் அரசியல் சந்திப்புக்களும் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பெல்சியம் வாழ் உறவுகளும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற 05/09/2022 திங்கட் கிழமை பி.ப 13.30 மணியளவில், 242 Rue De Loi
1000 Bruxelles அணி திரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

  • தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

  • தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments