சுவிஸ் போதகர் ஊடாக மட்டுமே யாழில் கொரோனா பரவியது-வைத்தியர் த.சத்தியமூர்த்தி !

You are currently viewing சுவிஸ் போதகர் ஊடாக மட்டுமே யாழில் கொரோனா பரவியது-வைத்தியர் த.சத்தியமூர்த்தி !

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளா்களுக்கும் சுவிஸ் போதகா் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனா் என தெரிவித்த சத்தியமூர்த்தி, மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30ற்கும் மேற்பட்டவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போல் 200ற்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டது,

அதில் 17 நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா். நோயாளா்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவாா்கள்.

யாழ்.அரியாலைக்குவந்த மதபோதகா் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது. வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்று பரவவில்லை. உலகளாவியரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இதன் எதிா்காலம் எப்படியிருக்கும் என தெரியவில்லை. ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடா்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனா்.

சுவிஸ் போதகர் ஊடாக மட்டுமே யாழில் கொரோனா பரவியது-வைத்தியர் த.சத்தியமூர்த்தி ! 1
பகிர்ந்துகொள்ள