சூடானில் இதுவரை பிரன்ஸ் நாட்டவர் உட்ப்பட 400பேர் பலி!

You are currently viewing சூடானில் இதுவரை பிரன்ஸ் நாட்டவர் உட்ப்பட 400பேர் பலி!

சூடானில் இருந்து வெளியேறும் போது பிரான்ஸ் நாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக துணை ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டவர் சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை தூதரகத்திற்கு வெளியே இருந்த வாகனத் தொடரணி மீது ராணுவ விமானத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதாக சூடானின் சண்டையிடும் இரண்டு பிரிவுகளிடம் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கார்ட்டூமில் இருந்து வெளியேறும் தூதரக கான்வாய் மீதான தாக்குதலுக்கு இரண்டு பிரிவினர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் பிரான்ஸ் நாட்டவர் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று இதுவரை தெளிவாக தெரியவில்லை.

தாக்குதலில் ஒரு பிரான்ஸ் நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதுடன், மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டவர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை பிரான்ஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் சூடான் நாட்டிலிருந்து அதன் வெளியேற்றத்தை பிரான்ஸ் நடத்தி வருகிறது.

இதனை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை “விரைவான வெளியேற்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.

 
பகிர்ந்துகொள்ள

Leave a Reply