சூடானில் சிக்கி தவிக்கும் பிரித்தானியர்கள் சந்திக்கும் அவலம்!

You are currently viewing சூடானில் சிக்கி தவிக்கும் பிரித்தானியர்கள் சந்திக்கும் அவலம்!

சூடானில் சிக்கி இருக்கும் பிரித்தானியர்கள் தங்கள் செல்லப்பிராணிகள் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவைகளை கொல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. சூடானில் இருந்து வெளியேறும் பிரித்தானியர்கள் சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,500 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் சூடானில் தங்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் பல்வேறு உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் மூலம் பிரித்தானியா அவர்களது இராஜதந்திரிகள் மற்றும் அவரது குடும்பத்தை சமீபத்தில் பத்திரமாக சூடானில் இருந்து வெளியேற்றியுள்ளது.

மேலும் சிறப்பு அவசரகால வான் சேவை மற்றும் பிரித்தானிய ஆயுதப்படையின் மீட்பு நடவடிக்கை விமானங்களை தவறவிட்ட சுமார் 4000 பிரித்தானிய மக்கள் இன்னும் வட ஆப்பிரிக்க நாட்டிற்குள் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையில் சூடானை விட்டு வெளியேற உதவிக்காக காத்து இருப்பதாக பிரித்தானிய பிரஜைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வெளியுறவுத் தேர்வுக் குழுவின் தலைவரும், டோரி எம்.பி.யுமான அலிசியா கியர்ன்ஸ், சூடானில் மீட்பு அதிகாரிகள் தங்களை கண்டுபிடிக்கும் சூழ்நிலைகள் குறித்து பிரித்தானிய மக்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் வன்முறை காரணமாக அங்கு மிகக் குறைவான தண்ணீர் மற்றும் மிகக் குறைந்த உணவு உள்ளது.

இதனால் தங்கள் செல்லப்பிராணிகள் பட்டினி கிடக்கும் என்று அவர்கள் கவலைப்படுவதால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைக் கொன்ற கதைகளைக் கூட நான் கேள்விப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் நடைபெறும் தீவிர சண்டை போக்கு காரணமாக மிகக் குறைந்த அளவிலான வெளியேற்றங்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments