செஞ்சோலை படுகொலை நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது.

You are currently viewing செஞ்சோலை படுகொலை நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது சிறீலங்கா வான்படை நடாத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53, அப்பாவி பாடசாலை மாணவிகள் மற்றும் 06, செஞ்சோலை பணியாளர்களின் 17,ம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்பட்டது.

இந்த நினைவு கூறல் நிகழ்வுகள் தாயகத்தின் பல பகுதிகளிலும்  உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில்  விமானங்கள் குண்டு வீச்சு நடாத்திய நேரம் காலை- 07-30,மணிக்கு
நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சொஞ்சோலை மீது[ 2006.08.14] காலை – 7.30,மணியளவில் நான்கு கிபிர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியிருந்தன.

இதில் 61,பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
130,மாணவிகள் காயமடைந்தனர். சிலர் படுகாயத்திற் உள்ளாகி அபயவங்களை இழந்திருந்தனர்.
செஞ்சோலை படுகொலை நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது. 1செஞ்சோலை படுகொலை நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது. 2செஞ்சோலை படுகொலை நாள் நிகழ்வுகள் தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தப்பட்டது. 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply