சென்னை மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் புதியதாக 169 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் அதிகபட்சமாக 4,192 பேர் ராயபுரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,192 ஆக உள்ளது.
தேனாம்பேட்டையில் 2800 பேரும், கோடம்பாக்கத்தில் 2,600 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் பாதிப்பு எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலத்திலும், 2178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 243 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11,739 பேர் குணமடைந்திருப்பதாகவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.