செம்மணியில் மீண்டும் அகழ்வுப்பணிகள்!

You are currently viewing செம்மணியில் மீண்டும் அகழ்வுப்பணிகள்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(16.7.2026) 34 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply