செம்மணியில் விடலைப்பருவத்தின் எலும்புக்கூடு!

You are currently viewing செம்மணியில் விடலைப்பருவத்தின் எலும்புக்கூடு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை ஒரு மனித எலும்பு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், வியாழக்கிழமை (30) மூன்றாம் கட்டத்தில் எடுக்கப்பட்ட 1 எலும்புக் கூட்டுடன் , மொத்தமாக 241 மனித எலும்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (30) மீட்கப்பட்ட எலும்புக்கூடு, ஒரு பதின்ம வயதுடையவருடையது (Teenager) என தெரிவிக்கப்பட்டுள்ளது

மே தினமான இன்றும் நிபுணர்கள் குழுவினர் தமது அகழ்வு பணிகளை நண்பகல் 1.30 மணி முதல் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply