சொந்த நாட்டிற்கு துரோகம் செய்ததால் ஆவேசமடைந்த புட்டின்!

You are currently viewing சொந்த நாட்டிற்கு துரோகம் செய்ததால் ஆவேசமடைந்த புட்டின்!

மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ திட்டத்தை கசியவிட்டதாக கூறி சிறப்பு புலனாய்வு துறை ஜெனரல் செர்ஜி பெசேடாவை (68) கொடூரமான லெஃபோர்டோவோ சிறையில் ஜனாதிபதி புடின் அடைந்துள்ளார். ரஷ்யாவின் சிறப்பு புலனாய்வு படையின் 5வது பிரிவிற்கு தலைவரான ஜெனரல் செர்ஜி பெசேடா(68) மீது மேற்கத்திய நாடுகளுக்கு தகவலை கசியவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பிறகு அவரை விசாரணைக்கு முந்தைய தடுப்பு காவலில் லெஃபோர்டோவோ சிறையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அடைந்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த முடிவானது, உக்ரைனில் ஏற்பட்ட மிகப்பெரிய ரஷ்ய இறப்பு எண்ணிக்கைக்கு பழி சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மற்ற மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதின் மூலம் ஜெனரல் செர்ஜி பெசேடா உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள புலனாய்வு தோல்விகள் தொடர்பான குற்றசாட்டுகளை சந்திக்கநேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெசேடாவின் இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மிக கொடூரமான மற்றும் சந்தேகத்திற்குரிய துரோகிகளை அடைக்கும் லெஃபோர்டோவோ சிறையில் அடிக்கப்பட்டுள்ளார், மேலும் அவருடன் அவரது துணை அதிகாரி அனடோலி பாலியுக்கும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு உளவுத்துறை மற்றும் அரசியல் சீர்குலைவுக்குப் பொறுப்பாளரான பெசேடா, அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு உக்ரைனுக்கு சென்று வந்து குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments