ஜனநாயக போராட்டத்தை மதிக்காத கொழும்பு ஊடகங்கள்! அமேரிக்கா கவலை

You are currently viewing ஜனநாயக போராட்டத்தை மதிக்காத கொழும்பு ஊடகங்கள்! அமேரிக்கா கவலை

அமைதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கியமான விடயம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கொழும்பை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்கள் ஏன் அதற்கான முக்கியத்துவத்தை வழங்கவில்லை என வியப்படைந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் அகிம்சை வழி பேரணி குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமைதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கியமான விடயம். நியாயபூர்வமான வேண்டுகோள்களை செவிமடுப்பது முக்கியமானது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபேரணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தது குறித்து நான் பார்வையிட்டேன். எனினும் கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என வியப்படைந்தேன் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள