பக்கப்பாட்டை நிறுத்துங்கள்!

You are currently viewing பக்கப்பாட்டை நிறுத்துங்கள்!

இலங்கை படையினருக்கு அழுத்தம் கொடுத்தால், சர்வதேச அமைப்புக்களில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும், தயங்கப் போவதில்லை என்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கொக்கரிப்பு, நாட்டை மேலும் மோசமான நிலைக்கே கொண்டு செல்லும் என்று, புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

போர் வீரர்கள் நாள் நிகழ்வில், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச வின் உரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். இவ்வாறான சூழலில் வெளிநாடுகளையோ அல்லது சர்வதேச அமைப்புக்களையோ பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

அவர்களை எந்த விடயத்துக்காக பகைத்தாலும், அதன் விளைவு எமது நாட்டுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகின்றது.

அவர்கள் அந்த அக்கறையைத் தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது விருப்பம். இலங்கை இவ்வாறு விலகுமாக இருந்தால் அது எமக்குச் சிறிய பின்னடைவைத் தரும். ஆனாலும், நாம் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவோம்” என்றும் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இவரின் கொக்கரிப்போ கூவலோ தமிழ்மக்களின் அரசியல் வேலைக்கு உகந்தது என்பதை திருவாளர் சித்தார்த்தன் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் தொடர்ந்தும் பக்கப்பாட்டு பாடுவதால் இழப்பு தமிழ் மக்களுக்குதான் என்பதை இனியாவது விழித்துக்கொள்வது நல்லது.

பகிர்ந்துகொள்ள