ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிரான அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிப்பு!

You are currently viewing ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிரான அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜனாதிபதிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும்.

18 முன்னாள் இராணுவ அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்கு நியமித்ததன் மூலம் அரச சேவையை இராணுவமயமாக்கியதாகவும் யஸ்மின் சூகா ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியுள்ளார் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments