ஜனாதிபதி மேக்ரானுக்கு தபாலில் வந்த வெட்டப்பட்ட மனித விரல்!

You are currently viewing ஜனாதிபதி மேக்ரானுக்கு தபாலில் வந்த வெட்டப்பட்ட மனித விரல்!

கடந்த வாரம் பிரான்ஸ் முழுவதும் கலவரத்தில் சிக்கியிருந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரானுக்கு தபால் மூலமாக வெட்டப்பட்ட மனித விரல் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திங்களன்று பாரிஸ் நகரில் அமைந்துள்ள எலிஸி அரண்மனைக்கு வந்துள்ள அந்த பொதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெட்டப்பட்ட மனித விரல் இருந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவலில், உண்மையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிற்றுண்டி வைக்கப்படும் பிரிட்ஜில் தான் அந்த விரலும் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த விரல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த விரலின் உரிமையாளரை அடையாளம் கண்ட பொலிசார், அவருக்கு உரிய மருத்துவ உதவிகளை அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எலிசி மாளிகைக்கு பொதியில் வந்த அந்த விரல் உடன், எந்த குறிப்பும் இல்லை எனவும், இதுவே விசாரணை அதிகாரிகளை குழப்பியதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, வெட்டப்பட்ட விரல் ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கேள்வி அதிகாரிகளை தடுமாற வைத்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அந்த விரலின் உரிமையாளர் கண்டிப்பாக அடையாளம் காட்டப்பட வாய்ப்பில்லை எனவும், அதற்கு பல்வேறு காரணங்களும் அரசாங்கம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையான பல் வேறு சூழலில், பிரான்ஸ் ஜனாதிபதிக்கு துப்பாக்கி தோட்டா வரையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதன்முறையாக வெட்டப்பட்ட மனித விரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவும், நாடும் முழுவதும் பல்வேறு சமூக காரணிகளால் பற்றியெரியும் சூழலில், ஜனாதிபதி மேக்ரானுக்கு இந்த பொதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனிடையே, ஜூலை 14ம் திகதி பாரிஸ் நகரில் Bastille தின கொண்டாட்டத்தை ஜனாதிபதி மேக்ரான் முன்னெடுக்கவிருக்கும் நிலையில், கலவரம் வெடிக்க வாய்ப்பிருப்பதாகவே அஞ்சப்படுகிறது.

Bastille தின கொண்டாட்ட சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments