மூன்றாவது “கொரோனா” அலை காரணமாக, ஜப்பானில் தலைநகர் “Tokyo” உள்ளிட்ட நான்கு பிரதான நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெருநகரங்களில் ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படும் மூன்றாவது “கொரோனா” அலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முன்முயற்சியாகவே அவசரகாலநிலை கொண்டுவரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கக்கூடிய மேற்படி நான்கு நகரங்களிலும் 25.04.21 இலிருந்து 11.05.21 வரை பொதுமக்கள் கூடும் இடங்கள் முடக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, மூன்றாவது “கொரோனா” அலையால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.