ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

  • Post author:
You are currently viewing ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதம் 10ம் திகதி நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

டிரம்ப், பல நாடுகளுக்கு காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கேப் கார்னிவலுக்கு சென்றுவிட்டு வாஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ஜி 7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளது என்றும் அப்போது டிரம்ப் குறிப்பிட்டார்.

அண்மையில் சீனாவுடன் வலுத்து வரும் மோதல் மற்றும் உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு போன்றவற்றால் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவான நட்பு நாடுகளை ஜி 7 குழுவில் இணைக்க டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள