ஜெனிவாவில் மீண்டும் தீர்மானம் – பிரிட்டன் தலைமையில் முயற்சி!

You are currently viewing ஜெனிவாவில் மீண்டும் தீர்மானம் – பிரிட்டன் தலைமையில் முயற்சி!

ஜெனிவாவில், இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் கொண்டு வர பிரிட்டன் தலைமையிலான ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளதாகவும், புலம்பெயர் தமிழர்களின் கடும் அழுத்தங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுவதாகவும், சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகியதாக இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ள போதிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்க முடியாது என ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கவில்லை என்பதுடன் கண்காணிப்பு மட்டத்தில் செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கண்காணிப்பு மட்டத்தில் இருந்தும் விலகுவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள