ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஓரணியில் தமது நிலைப்பாட்டை சமர்ப்பிக்கும் திட்டம் குறித்து இன்று கொழும்பில் கூடி ஆராயப்படவுள்ளது.
கடந்த 3ஆம் திகதி வவுனியாவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூடடணி ஆகிய 3 கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தின. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், 3 கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பில் 6ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதன்போது வரைவு இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்கள். கொழும்பில் இன்று நடக்கும் கூட்டத்தில் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர, சில மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு அழைத்துள்ளது.
நிமல்ஹா பெர்ணான்டோ, பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்களும்இதில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.