ஜேர்மனியில் இரு சிறுமிகளை கத்தியால் குத்திய புலம்பெயர் நபர்!

You are currently viewing ஜேர்மனியில் இரு சிறுமிகளை கத்தியால் குத்திய புலம்பெயர் நபர்!

தெற்கு ஜெர்மனியில் நீதிமன்றம் ஒன்று, சிறுமிகள் இருவரை கத்தியால் கொடூரமாக தாக்கிய எரித்திரியா புலம்பெயர் நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 14 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். அவரது 13 வயதான தோழி ஆபத்தான நிலையில், காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்புடைய சம்பவமானது Illerkirchberg நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது.

இதில் Ece என்ற 14 வயது சிறுமி, உடல் முழுவதும் 23 கத்திக் குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் எரித்திரியா நாட்டவரான 27 வயது Okba B என்பதும், இவர் 2015ல் ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

சம்பவத்தன்று உள்ளூர் குடிவரவு அலுவலகத்தில் பயன்படுத்த நினைத்து மறைவாக வைத்திருந்த கத்தியை சிறுமிகள் பார்த்த நிலையில் அவர்கள் மீது பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

எதியோப்பாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த Okba B, குடிவரவு அலுவலகத்தில் கடவுச்சீட்டு கோரியிருந்த நிலையில், தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அதிகாரிகள் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சிறுமிகள் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள Okba B, 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர், கடந்த நவம்பர் மாதம் வரையில் Okba B நாளும் வேலைக்கு செல்பவர், ஜேர்மன் மொழி அறிவு மற்றும் அமைதியான நபர், சாதாரணமாக ஜேர்மன் சமூகத்தில் ஒருவராகவே காணப்பட்டும் வந்துள்ளார் என நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள Okba B, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். Okba B பெற்றுள்ள ஆயுள் தண்டனை மீது மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஆனால் தண்டனை உறுதி செய்யப்பட்டால், தண்டனை காலத்திலேயே அவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

இந்த வழக்கானது ஜேர்மனியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் குடியேற்ற எதிர்ப்புக் குழுக்களால் அரசியல் ரீதியாக சுரண்டப்படுவதை விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மட்டுமின்றி, கொல்லப்பட்ட சிறுமி துருக்கி வம்சாவளியை சேர்ந்த ஜேர்மானியர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments