ஜேர்மனியில் பதிவான கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 17,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) புதன்கிழமை ஜேர்மனியில் 17,015 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு, 11,903 புதிய நோய்த்தொற்றுகள் இருந்தன, அதற்கு முந்தைய நாள் 6,771 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.
நாடு முழுவதும் புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களுக்குள் 100,000 பேரில் 80.4 பேருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாளில் 100,000 பேரில் 75.1 பேருக்கும், ஒரு வாரத்திற்கு முன்பு 100,000 பேரில் 65.4 பேருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த அதே எண்ணிக்கையாகும்.
ஜேர்மனியில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் அதிகபட்சமாக 100,000 பேருக்கு 15.5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அக்டோபர் விடுமுறை நாட்களில் பயணிகள் நாடு திரும்புவதன் காரணமாக இருக்கலாம் என்று RKI எச்சரித்துள்ளது.