ஹெய்ட்டியில் கடத்தப்பட்ட அமெரிக்கர்கள், கனேடியரை விடுவிக்க 17 மில்லியன் டொலர் கப்பம் கோரி நிபந்தனை!

You are currently viewing ஹெய்ட்டியில் கடத்தப்பட்ட அமெரிக்கர்கள், கனேடியரை விடுவிக்க 17 மில்லியன் டொலர் கப்பம் கோரி நிபந்தனை!

ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே அமெரிக்கா மற்றும் கனடா பிரஜைகளான கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 17 பேர் வரை ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க தலா 1 மில்லியன் டொலர் வீதம் 17 மில்லியன் டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆயுதக் கும்பலால் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதை ஹெய்ட்டி அரச அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

400 மவோஸோ என்ற கும்பலால் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு வெளியே வைத்து கடந்த வார இறுதியில் கடத்தப்பட்ட மிஷனரிகளை விடுவிக்கக் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஹெய்ட்டி நீதி அமைச்சர் லிஸ்ட் க்விட்டல் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்களில் 16 அமெரிக்கர்கள், ஒரு கனேடியர் ஆகியோர் அடங்குகின்றனர். இவா்களில் ஐந்து பேர் சிறுவர்களாவவர்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்கும் முயற்சியில ஹெய்ட்டி பொலிஸாருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் மிஷனரிகள் தேவாலய தலைமையகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்ட தனது பிரஜையின் விடுதலை குறித்து ஹெய்ட்டி அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளதாக கனடாவும் அறிவித்துள்ளது.

அனாதைச் சிறுவர் இல்லமொன்றுக்கு பேருந்தில் சென்று திரும்பியவேளை இவா்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஹைட்டி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிரட்டில் பணம் பறிக்கும் நோக்கியில் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் ஹெய்ட்டியில் அடிக்கடி இடம்பெறுகின்றன. அதிகளவு ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் பட்டியலில் ஹெய்ட்டி முன்னணியில் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் கொல்லப்பட்டதிலிருந்து, அங்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு நிலை மோசமாகியுள்ளது. சாதாரண மக்கள் உயிர் பிழைப்பதற்கான தினசரி போராட வேண்டியுள்ளது.

இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் ஹெய்ட்டியில் 600 க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 3 மாதங்களில் இவ்வாறான 231 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக உள்ளூர் சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மிகவும் ஏழ்மை நாடான ஹெய்டியில் அடிக்கடி நிகழும் வன்முறைகளால் நெருக்கடி நிலவி வருகிறது. ஜனாதிபதி மோஸ் படுகொலை மற்றும் அடுத்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments