ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கைப்பற்றியதாக வியாழக்கிழமை அறிவித்தது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா சமீபத்தில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளதன் தொடர்ச்சியாக இது இருக்கிறது.
உக்ரைனின் தலைமை தளபதி ஒலெக்சாண்டர் சிரிஸ்கி (Oleksandr Syrsky) வார இறுதியில் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர், பேர்டிச்சி(Berdychi) உட்பட அருகில் உள்ள மற்ற இரண்டு கிராமங்களில் இருந்து உக்ரைனிய படைகள் பின்வாங்கியதாகக் கூறினார்.
பேர்டிச்சி கிராமம், பிப்ரவரியில் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்த Avdiivka நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் ரஷ்யா கைப்பற்றிய சிறிய கிராமங்களின் வரிசையில் இதுவும் சேர்க்கிறது, இது பிராந்தியத்தில் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை குறிக்கிறது.
அமெரிக்காவிடம் இருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வருவதற்கு முன்னதாக, அதிகபட்ச பகுதிகளை பாதுகாக்கவே ரஷ்யா முயற்சிக்கிறது என்று பகுப்பாய்வியாளர்கள் கருதுகின்றனர்.