மண், இலைகளை உண்டு உயிர் வாழும் சூடானிய மக்கள்!

You are currently viewing மண், இலைகளை உண்டு உயிர் வாழும் சூடானிய மக்கள்!

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.

சுமார் 49 மில்லியன் மக்கள் தொகையில் 18 மில்லியன் பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினருக்கு இடையேயான போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

160-க்கும் மேற்பட்ட போர் காயமடைந்தவர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உணவு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

மக்கள் உணவு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இடப்பெயர்வு காரணமாக மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சமூகம் வழங்கும் உதவிகள் பட்டினி பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவதை சூடான் ராணுவம் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை கூட சாப்பிட்டு உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் உயிர் வாழ மண் மற்றும் இலைகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments