தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை: 3 பேர் பலி!

You are currently viewing தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை: 3 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியாவிடம் இருந்து பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டிருந்த மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை புதிதாக 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply