டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

You are currently viewing டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூரில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி, போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே நேற்றைய தினம் (18.02.2023)  மரணமடைந்துள்ளார் என மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 16ஆம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் காரணத்தால் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் (17.02.2023) மட்டும் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும் மட்டக்களப்பில் 4 பேர் உட்பட 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் சுற்றுப்புறச்சூழலைத் துப்பரவு செய்யுங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள், காய்ச்சல் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள், காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் பாவிக்காதீர்கள்.

​ஆகவே ‘ஒரு நுளம்பு உன்னை நாளைக் கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்’ என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்றுச் சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறும் மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் குனசிங்கம் சுகுணன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments