டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு!

You are currently viewing டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு!

டென்மார்கில்  பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு!

தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு, உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும் புனித மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் ஐந்தாவது தடவையாகவும், København பல்கலைக்கழக மாணவர்களால் முதலாவது தடவையாகவும்  24.11.2021 அன்றும் நடாத்தப்பட்டது. அதனை  தொடர்ந்து  மூன்றாவது   தடவையாக Odense பல்கலைக்கழக மாணவர்களால் 25.11.2021 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது.

டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 1

முதல் நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றதுடனதொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிக்கப்பட்டு  அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம், சுடர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.

டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 2

மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை, எழுச்சி நடனம், கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன.

எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “தேச விடுதலைப்பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய அவர்களது  கையில் தான் உள்ளது என்பதில் இளையோர்கள், தெளிவாக உள்ளார்கள் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று , மாவீரர்களது இலட்சியம் நிறைவேறும் வரை இளையோர்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு தந்திருக்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நினைவேந்தலைத் தொடர்ந்து எமது தேசத்தைக் காக்க எழுந்த வீரர்களை நினைவு கூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 27.11.2021 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது.

 நன்றி

டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 3
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 4
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 5
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 6
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 7
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 8
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 9
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 10
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் வார நிகழ்வு! 11
பகிர்ந்துகொள்ள

Leave a Reply