டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகர பல்கலைக்கழக மாணவர்கனின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.
ஓல்போக் மற்றும் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து 22.11.2023 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது
தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களின் நினைவைச் சுமந்து, தேசியக் கொடியேற்றல், பொதுச் சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுகளை சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், சிறப்புரைகள் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகுந்த எழுச்சியுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது போல் எமது அடுத்த தலைமுறையினர், மாவீரர்களின் கனவினைச் சுமந்து செல்கின்றது பெருமையாகவும் நம்பிக்கையாகவும் உள்ளன.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைகளை ஆகுதியாக்கி கண்மூடி உறங்கும் எம் மாவீரர்களை இன்று 23.11.2023 அன்று ஓகுஸ் நகர பல்கலைக்கழக மாணவர்களாலும் நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடகி உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




















