டென்மார்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரங்களில் தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (01,02/10/2022 ) டென்மார்க்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.
இந் நிகழ்வுகள் முறையே ஈகைச்சுடர் ஏற்றேல், அகவணக்கம், மலர் வணக்கம், கவிதைகள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி வணக்க நிகழ்வுடன், இனிதே நிறைவேறியது


















