தவக்கால பண்டிகைக்கு பின்னர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, குழந்தைகள் பள்ளியிலிருந்து கொரோனா தொற்றை வீடுகளுக்கு கொண்டு வருவார்கள் என்று அஞ்சுவதாக ஆயிரக்கணக்கான டென்மார்க் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
“எங்கள் பாசத்துக்குரிய குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராகப் போரிடப் போவதில்லை” (Våre små kjære skal ikke i krig mot en usynlig fiende), இது ஒரு புதிய டென்மார்க் முகநூல் குழுவின் சுலோகமாகும்.
தவக்கால பண்டிகைக்குப் பின்னர் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் குழுவில் கிட்டத்தட்ட 30,000 பேர் சேர்ந்துள்ளனர். மேலும், கையொப்ப பிரச்சாரத்தில் 14,000 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன .
இந்த செய்தியை Ekstra Bladet மற்றும் Danmarks radio உட்பட டென்மார்க்கிலுள்ள பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நோர்வேயில், மழலையர் பள்ளி ஏப்ரல் 20 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது மற்றும் முதலாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது என்று நோர்வே அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: Dagbladet