டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்!

You are currently viewing டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு 22.11.2022 அன்று  டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச் சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுகளை சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், சிறப்புரைகள், விபரணகாட்சிப்படுத்தல் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகவும் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது போல் எமது அடுத்த தலைமுறையினர், மாவீரர்களின் கனவினைச் சுமந்து செல்கின்றது பெருமையாகவும் நம்பிக்கையாகவும் உள்ளன.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை விதையாக்கி கண்மூடி உறங்கும் மானமவீரர்களை தொடந்து வரும் நாட்களில் வழமைபோ ஓடன்ஸ்ச மற்றும் ஓகுஸ் ஆகிய நகர பல்கலைக்கழக மாணவர்களாலும் நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடகி உள்ளது.

டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்! 1
டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்! 2
டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்! 3
டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்! 4
டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல்! 5
பகிர்ந்துகொள்ள

Leave a Reply