டென்மார்க் தலைநகரப் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்
21.11.2023 டென்மார்க் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச் சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுகளை சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், சிறப்புரைகள், விபரணகாட்சிப்படுத்தல் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகவும் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது போல் எமது அடுத்த தலைமுறையினர், மாவீரர்களின் கனவினைச் சுமந்து செல்கின்றது பெருமையாகவும் நம்பிக்கையாகவும் உள்ளன.
தொடந்து வரும் நாட்களில் வழமைபோல் ஓடன்ஸ்ச மற்றும் ஓகுஸ் நகர பல்கலைக்கழக மாணவர்களாலும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடகி உள்ளது.



















