மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்கள் நிராகரிப்பு!

You are currently viewing மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்கள் நிராகரிப்பு!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரி மானிப்பாய் மற்றும் பலாலி சிறீலங்கா காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மானிப்பாய் மற்றும் பலாலி சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே சிறீலங்கா காவற்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவுகூர முடியும் என தெரிவித்த நீதிமன்றம் சிறீலங்கா காவற்துறையினரின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை சிறீலங்கா காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments